தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் நாளை கனிமொழி எம்பி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்கிறார்.
இது தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, சமூகநலன் (ம) மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளருமான கீதா ஜீவன் ஆகியோர் நாளை 20ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.
இதன்படி மாலை 6.00 மணிக்கு மூப்பன்பட்டி, 6.30 மணிக்கு தோனுகால், இரவு 7.00 மணி சத்திரப்பட்டி, 8 மணிக்கு ஊத்துபட்டி ஆகிய பகுதிகளில் பொதுமக்களின் குறை கேட்டல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
23ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு கயத்தாறு ஒன்றியம் கே.குப்பனாபுரம், 5 மணிக்கு தெற்கு வண்டானம், 6 மணிக்கு வடக்கு வண்டானம், 7 மணிக்கு கொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மக்கள் களம் நிகழ்ச்சி மூலம் பொது மக்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்” அறிக்கையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


