நாசரேத் – அரசாங்கநகர் பரி. மாற்கு ஆலயத்தில் நடந்த அசன விருந்து நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் நாசரேத் அருகே உள்ள முதலிமொழி சேகரம் அரசாங்கநகர் பரி.மாற்கு ஆலய 23வது ஆண்டு பிரதிஷ்டை விழா 3நாட்கள் நடந்தது. முதல் நாள் மாலை 7மணிக்கு கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்தது. கடையனோடை அக்கினி ஸ்தம்ப எழுப்புதல் ஊழியங்களின் நிறுவனர் வின்ஸ்டன் தேவ செய்தி கொடுத்தார்.
2வது நாள் மாலை 6மணிக்கு பிரதிஷ்டை பண்டிகை ஆயத்த ஆராதனையும், பரி. ஞானஸ்நான ஆராதi யும் நடந்தது. 3வது நாள் அதிகாலை 4.30 மணிக்கு பண்டிகை ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடந்தது. அன்று மாலை 4.30 மணிக்கு ஆலய வளாகத்தில் அசன விருந்து நிகழ்ச்சி நடந்தது. கடையனோடை சேகரகுரு ஆசீர் சாமுவேல் ஜெபித்து அசன விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் திரளானபேர் களுக்கு அசன விருந்து வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கடையனோடை சேகரகுரு ஆசீர் சாமுவேல், சபை ஊழியர் பிரின்ஸ் எபனேசர் மற்றும் அரசாங் நகர் சபை மக்கள் செய்திருந்தனர்.


