2023 ஆம் ஆண்டிற்கு இந்திய விமானப்படையில் ஆட்சேர்ப்பிற்கான அக்னிவீர் வாயு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு 18 முதல் 21 வயது வரையுள்ள திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 27.06.2003 மற்றும் 27.12.2006 ஆகிய தேதிகளுக்குள் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதியாக 12 ஆம் வகுப்பில் (இயற்பியல், கணிதம் மற்றும் ஆங்கிலம்) குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று வருட டிப்ளோமா பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, இன்/பர்மேஷன் டெக்னாலஜி) படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது இரண்டு வருட VOCATIONAL COURSE கணிதம் மற்றும் அறிவியல் பாடத்துடன் 50 சதவீத மதிப்பெண்ணுடன் படித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.08.2023 ஆகும்.
இந்த ஆட்சேர்ப்பு மூன்று கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. முதலாவதாக எழுத்து தேர்வு 13.10.2023 அன்று நடைபெறுகிறது. இரண்டாவதாக உடற் தகுதி தேர்வும் மூன்றாவதாக மருத்துவ பரிசோதனையும் நடைபெறும். இத்தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தில் அறியலாம். இந்திய விமானப்படையில் இணைந்து பணியாற்ற விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


