தூத்துக்குடியில் வருகிற 23ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 23.08.23 அன்று காலை 11.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் வைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நாளில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.


