நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் துலுக்கன்குளம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் நடைபெற்று வரும் புது வாழ்வு சங்கம் பல்வேறு சமுதாயப் பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று காலை 11 மணியளவில் துலுக்கன்குளம் மடை எண் ஒன்றான துலுக்கன்குளம் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்றது. தூர் வாரும் பணியை விவசாய சங்க தலைவர் தனசேகர் தலைமையில் இயேசு விடுவிக்கிறார் ஊழிய தகவல் தொழில் நுட்பத் துறை தலைமைப் பொறுப்பாளர் கிளமெண்ட் எபனேசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் துலுக்கன்குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் தனசேகர், முன்னாள் தலைவர் ராஜபாண்டி, மடை உறுப்பினர்கள் கோயில்விளை கணேசன், சொர்ணகோபி, கனகராஜ், பால்ராஜ், விவசாய சங்கம் அம்மன்புரம் ஆறுமுகம், கவுரவ ஆலோசகர் கடற்கரை தங்கம்,இயேசு விடுவிக்கிறார் ஊழிய சமூக ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின், மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமையில் பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். இக்கால்வாய் தூர்வாரப்படுவதினால் இராணிமகாராஜபுரம் அடைக்கலாபுரம், கோயில்விளை, வன்னிமாநகரம், நத்தகுளம், கானியாளன் புதூர், கானம் ஆகிய கிராமங்களில் சுமார் 272 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.


