ஸ்ரீவைகுண்டம் அறிநிலைத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் நம்பி. இவர் இந்த பகுதியில் உள்ள அரசு அறிவித்துள்ள பணிகளை மிக வேகமாக மக்களிடையே கொண்டு சேர்த்தார். மேலும் இங்குள்ள பழமையான கோயிலுக்கு ஒரு கால பூஜை ஏற்பாடு செய்தது . மின்சாரம் இல்லாத கோயிலுக்கு நன்கொடையாளர் மூலம் வொயரிங் செய்து மின் இணைப்பு கொடுத்தது உள்பட பல பணிகளை செய்து சிறப்பாக செய்து வந்தார். மேலும் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோயில்களையும் மீட்டார். குத்தகை தராத இடத்தில் குத்தகை வசூல் செய்ய நடவடிக்கை எடுத்தார். புதிதாக அறங்காவலர்களை நியமனம் செய்து அவர்கள் மூலம் கோயில் வளர்ச்சி பணிகளை திட்டம் தீட்டினார். இதனால் இவருக்கு சுதந்திர தினவிழாவில் வைத்து மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில் ராஜ் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அவரை அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் பார்த்தீபன், மற்றும் உறுப்பினர்கள், அறங்காவலர்கள் பாராட்டினார்கள்.


