சாத்தான்குளம் அருகில் உள்ள சிரம்பரபுரம் ஆர்.சி.நடுநிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி வணக்கம் மேரி தலைமை வகித்தார். பள்ளிதாளாளர் சிதம்பரா பு-ரம் பங்குதந்தை இருதயசாமி தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். வில் வித்தை போட்டியில் உலக சாதனை புரிந்த நாட்டார்குளம் மாணவி சுப்பு லெட்சுமி என்ற மேகலாவை மேடையில் அழைத்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாணவியின் பெற்றோர் மனோகரன், பேச்சியம்மாள், பயிற்சியாளர் சண்முகநாதன், தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் மாசிலாமணி, நெல்லைமலர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


