77 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று (15.08.2023) வல்லநாடு அரசு ஆரம்ப நிலையத்தில் மருத்துவ அலுவலர் டாக்டர்.கிருஷ்ணவேணி தமிழ்செல்வி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.செல்வகுமார் மருந்தாளுநர் திரு.வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் திரு.சாஹிர், மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


