தூத்துக்குடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் இருந்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார் ஆகியோர் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில், உதவி ஆணையர் கலால் (பொ) அபுல்காசிம், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாநாகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் தினேஷ் குமார் முன்னிலையில், போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. துணை ஆணையர் ராஜாராம், மாநகராட்சி ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், அரசு அலுவலர்கள் ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


