சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீ நாளா ல்சுடலைமாடசுவாமி திரு க்கோவில் கொடைவிழா 5 நாட்கள் நடைபெற்றது.
கொடைவிழாவிற்கு நாசரேத் காவல் ஆய்வாளர் ஜெயசீலன், உதவி ஆய்வா ளர்கள் எபனேசர், ராய்ஸ் டன், வைகுண்டதாஸ்,இரத் தினசாமி நாடார்,சுகிர்தராஜ் நாடார் ஆகியோர் முன்னி லை வகித்தனர். முதல்நாள் மாலை 6 மணி க்கு நாலுமாவடி எம்.வசந்தி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சியும், சுகிர்தராஜ் உபயதாரர் ஏற்பாட்டில் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மேகா குழுவினரின் இன்னிசைகச்சேரியும்,3வது நாள் மாலை 5 மணிக்கு 508 குத்துவிளக்கு பூஜையும் நடைபெற்றது.
இதில் கல ந்து கொண்டவர்களுக்கு ஏ.மகேஸ்வரி அஜித்ராஜ் பரிசுகளை வழங்கினார். இரவு 8 மணிக்கு விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ்”ஆந்தகுடி இளை யராஜாவின்இளையகானம் நடைபெற்றது.4-வது நாளா ன 11.08.2023 வெள்ளிக்கி ழமை மதியம்,இரவு வில்லி சைநிகழ்ச்சியும்,சாமி அழை த்தல் நிகழ்ச்சி காலை 10 ம ணிக்கும்,இரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதலும் நடை பெற்றது.08.08.2023 செவ் வாய் இரவு முதல் 12.08.2023 இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட் டியார் செய்திருந்தனர்.


