சந்திரபாபு தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கியவர்.
சந்திரபாபு தூத்துக்குடியில் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தவர். ஜோசப்பிச்சை என்னும் பெயரிடப்பட்ட இவரைப் பாபு என்று செல்லமாக அழைத்து வந்தனர். இவர், சந்திரகுல வம்சத்தில் பிறந்திருந்த காரணத்தால் தமது பெயரைப் பின்னாளில் சந்திரபாபு என மாற்றிக் கொண்டார்.
சந்திரபாபுவின் தந்தை ஜெ.பி.ரோட்ரிக்ஸ் ஒரு விடுதலைப் போராட்ட வீரர். சுதந்திர வீரன் என்ற பத்திரிகையை நடத்தி வந்தார். அன்றைய பிரித்தானிய அரசு இவரது சொத்துகளைப் பறிமுதல் செய்து, சத்தியாக்கிரக இயக்கத்தில் கலந்து கொண்டமைக்காக 1929 இல் அவரைக் கைது செய்தது. அவர் விடுதலையானவுடன் அவரையும் அவரது குடும்பத்தினரையும் இலங்கைக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் பணியாற்றினார். சந்திரபாபு கொழும்பில் புனித யோசேப்பு கல்லூரியிலும் பின்னர்க் கொழும்பு அக்குவைனாசு கல்லூரியிலும் கல்வி கற்றார். சந்திரபாபுவின் குடும்பம் 1943-ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி சென்னையில் குடியேறியது. சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தனர். தந்தை தினமணி பத்திரிகையில் பணியாற்றினார்.
சிறு வயதிலேயே பாடும் திறமை பெற்றிருந்த சந்திரபாபு, ஆங்கிலேயரின் நவநாகரிகப் போக்கினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தனது 16-ஆம் வயதில் சென்னையை அடைந்து திரையுலகில் நுழைய முயற்சிகளை மேற்கொண்டார்.
பாடல்கள்
பிறக்கும்போதும் அழுகின்றான்
ஒண்ணுமே புரியலே உலகத்திலே
நான் ஒரு முட்டாளுங்க
புத்தியுள்ள மனிதரெல்லாம்
பொறந்தாலும் ஆம்பிளயா
சீமையெல்லாம் தேடிப்பாத்து
கல்யாணம் வேணும் வாழ்வில்
கோவா மாம்பழமே
உனக்காக எல்லாம் உனக்காக
பம்பரக் கண்ணாலே காதல்


