திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் குரு கணேஷ். இவர் மற்றும் இவரது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து இன்று விடுமுறை தினம் என்பதால் அவரது காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக கார் நிலை தடுமாறி சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் ஓட்டி வந்த குருகணேஷ், உடன் வந்த நண்பர்கள் கந்தசாமி, சுடலைமணி, முத்துகுமார், மனோஜ் குமார், ஹரிஹரன் ஆகிய ஆறு பேரும் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அந்த வழியாகச் சென்றவர்கள் செய்துங்கநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


