வல்லநாடு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு ஊராட்சியில் ரூ.38 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை கனிமொழி எம்பி இன்று குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார், மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்


