தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா இன்று நடைபெற்றது. நிகழ்வில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி உரையாற்றினார். நிகழ்வில் சார் ஆட்சியர் கௌரவ்குமார், மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


