செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் ரம்ஜானை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடந்தது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் பழைய பள்ளிவாசலில் அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட பேச்சாளர் சுலைமான் தொழுகையை நடத்தினார்.
இதில் தமிழ்நாடு தவ்கீத் ஜமாத் தலைவர் சாதிக், செயலாளர் கரீம் பாஷா, பொருளாளர் அப்துல் காதர், துணைத் தலைவர் அப்துல் கனி, செய்யது இப்ராஹிம், நவபலி, வாசிம், சித்திக், அப்தாப் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


