அதிமுக பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடிபழனிசாமியை அதிமுகவினர் தேர்வு செய்ததும் மற்றும் கடந்த ஜூலை 11ம்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களையும், முடிவுகளையும் அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பினை வரவேற்று தூத்துக்குடி தெற்குமாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அறிவுறுத்தலின் பேரில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் காசிராஜன் தலைமையில் அதிமுகவினர் ஸ்ரீவைகுண்டம் முத்துராமலிங்க தேவர் சிலை முன்பாக பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ஸ்ரீவை நகர செயலாளர் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட துணைத்தலைவர் சொர்ணபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பொன்ராஜ், ரமேஷ், குமார், இணை செயலாளர் சுப்பையா, வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, திருமாழ்மார்பன், மாரியப்பன், இருளப்பன், சுப்பிரமணியன், தகவல்தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் தினேஷ் முன்னாள் நகர செயலாளர் பால்துரை, அண்ணா போக்குவரத்துதொழிற்சங்க மண்டல தலைவர் எட்வர்டுஅந்தோணிராஜ், பணிமனை செயலாளர் மாரியப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


