அதிமுக பொதுச்செயலாளராக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதும் ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மாணங்களையும், முடிவுகளையும் அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை செய்ததை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அறிவுருத்தலின் பேரில் தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் பேரூராட்சி அலுவலகம் அருகிலுள்ள கே.வி.கே.சாமி சிலை முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்நாராயணன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பாலமுருகன், நாசரேத் வார்டு செயலாளர் பெரியதுரை, நாசரேத் நகர இளைஞர் பாசறை செயலாளர் ஜெயக்குமார், நாசரேத் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ரவீந்திரன், வார்டு செயலாளர் முனியாண்டி, மகேஷ், பெருமாள், பொன்பாண்டியன், பொன் ராஜ், குன்னி மலையான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


