தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில், ஆக்கிரமிப்பில் இருந்த 43 கடைகள் 4 வீடுகள் இடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் அதற்கு அதற்கு ஏற்ப சாலை வசதிகள் இல்லாத சூழ்நிலை உள்ளது. இதற்கு ஆங்காங்கே ஆக்கிரமிப்பு ஒரு காரணமாகவே உருவாக்கி உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி வந்தாலும் சில வாரங்களில் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. பலமுறை மாநகராட்சி கண்டித்தும் இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உத்தரவின் பேரில் தெற்கு மண்டல உதவியாளர் ராமச்சந்திரன் தலைமையில் அதிகாரிகள் காந்திமதி, ஆறுமுகம், நாகராஜன், மற்றும் ராஜ பாண்டியன் மற்றும் பணியாளர்கள் 4 ஜேசிபி வாகனங்கள் மூலம் இன்று பிரையன்ட் நகர் மெயின் ரோடு, மற்றும் வள்ளிநாயகபுரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதில் 43 கடைகள், 4 வீடுகள் இடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.பல கோடி ஆகும். குறிப்பாக ஒரு வீடு சுமார் ரூ.10 லட்சம் மதிப்புக்கு மேல் கட்டப்பட்ட ஒரு வீடாகும்.


