ஏப்.30ம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தினால் கேஷ்பேக் சலுகை பெறலாம் என தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்துவரியினை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள்
செலுத்தி 5% ஊக்கத்தொகை பெறலாம். சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்தி மாநகர்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளில் தங்களது பங்களிப்பினை வழங்கிடுமாறும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தள்ளது.


