தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது.
தூத்துக்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் பொது மக்கள் பயன்பெரும் வகையில் நீர், மோர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐஎன்டியூசி மாநில பொது செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார்.
அமைப்பு சாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, டி.சி.டி.யு மாவட்ட தலைவர் ஆடிட்டர் சிவராஜ் மோகன், எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜாராம், தெற்கு மண்டல பொது செயலாளர் தனசேகர், தெர்மல்முத்து, அமைப்புச்சாரா தொழிலாளர் காங்கிரஸ் சுந்தர்ராஜ், ஊடக பிரிவு சுந்தர்ராஜ் முன்னாள் இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் ஜெயமணி, பேரையா, மனுவெல், காமாட்சி தனபால், எஸ்சி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு ஜேசுதாசன், அம்பிகாபதி, கண்ணிச்சாமி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


