உடன்குடி தூய்மைப் பணியாளர் தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
உடன்குடி புதுகாலனியைச் சேர்ந்த கடலைமாடன் மனைவி தங்கம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் “எனது கணவர் கடலைமாடன் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் துய்மை பணியாளரான கடத்த 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி வந்தார். இந்நிலையின் பணி மூப்பு அடிப்படையில் அவருக்கு பதவி உயர்வு வந்தபோது, பேரூராட்சியின் தலைவர் ஹுமைராரமிஸ் பாத்திமாளின் மாமியார் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆயிஷா கல்லாசி என்பவர் அதற்கு 3 லட்சம் ரூபாய் லட்சம் கேட்டார். எனது கணவர் அவர் கேட்ட தொகையை கொடுக்காததால், அவரை பழிவாங்கும் நோக்கில் பணியிடத்தில் பல்வேறு இடையூறு செய்து மன உளைச்சலை ஏற்படுத்தி துன்புறுத்தினார்.
இறுதியாக கடந்த 17-03-2023 ம் தேதி அன்று பணிக்கு வந்த எனது கணவரை சாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி மேற்படி ஆயிஷா கல்லாசி மற்றும் செயல் அலுவலர் பாபு தற்போதைய உடன்குடி பேரூராட்சி தலைவர். ஹுமைரா ரமிஸ் பாத்திமா ஆகியோர் சேர்ந்து திட்டியதால் மன உளைச்சலால் அவமானத்தால் எனது கணவர் சுடலை மாடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.அதன் பின்னர் 23-03-2023 ம் தேதி அன்று எனது கணவர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து உயிரிழந்து விட்டார்.
சாதிய வன்கொடுமையால் உயிரிழந்த உடன்குடியை சேர்ந்த எனது கணவர் கடலைமாடன் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ஹுமைரா ரமிஸ் பாத்திமாலின் பேரூராட்சி தலைவர் பதவியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உடன்குடி தேர்வுநிலை’ பேரூராட்சி பணியாளர்களை இடமாற்றம் செய்ய வேண்டும், வழக்கின் முதல் எதிரி ஆயிஷா உடல் நிலையை காரணம்காட்டி தூத்துக்குடி மருத்துவமனையில் உள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும் எனது கணவரின் இறப்புக்கு காரணமான வன்கொடுமை எதிரி ஆயிஷா கல்லாசி தற்போது உடல் நிலையை காரணம் காட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உள்ளார். இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே தாங்கள் ஒரு சிறப்பு மருத்துவ குழுவை உடனடியாக நியமித்து மேற்படி எதிரியின் உடல் நிலையை பரிசோதனை செய்து அவர் போலியான காரணம் காட்டி அரசியல் செல்வாக்கால் சிறைக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை விடுத்தார்.


