தமிழக முதல்வர் தேர்தல்கால வாக்குறுதியின் அடிப்படையில் சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்த வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வுதியம் ரூ.9ஆயிரம் வழங்கிடவும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு நீட்டிப்பததோடு சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறை படுத்திட வேண்டும், காலி பணியிடங்களை விரைந்து நிரப்பிட வேண்டும், ஒட்டுமொத்த தொகை அமைப்பாளருக்கு ரூ.5லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3லட்சமும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் ஜெயபாக்கியம் தலைமையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்கள், அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


