Mass Image Compressor Compressed this image. https://sourceforge.net/projects/icompress/ with Quality:50
ழுகுமலையில் மின்மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அண்ணா புதுதெருவை சேர்ந்தவர் சிங்கராஜ். (57). கழுகுமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை வீட்டில் உள்ள மின்மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
அவரை உறவினர்கள் மீட்டு கழுகுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அவரது உடல் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மின்சாரம் பாய்ந்து இறந்த சிங்கராஜிக்கு அன்னபாக்கியம் என்ற மனைவியும், ஆனந்த் என்ற மகனும், அனிதா என்ற மகளும் உள்ளனர்.


