தமிழ் வருட பிறப்பையொட்டி கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ அழகியகூத்தர் திருக்கோயிலில் (நடராஜரின் பஞ்ச விக்ரக ஸ்தலம்) தமிழ் வருடபிறப்பு அன்னாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது.காலை 9 மணிமுதல் ஸ்ரீ அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினர் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஹோமம், பகல் 11 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.. 1 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சாத்தான்குளம் அருள்தரும் தேவிஸ்ரீ அழகம்மன் திருக்கோயிலில் சித்திரை ஸ்ரீசோபகிருது தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடைபெற்்றது. இதில் திரளான பக்தர்கள்¢ கலந்து கொண்டனர். சாத்தான்குளம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்தரும் ஸ்ரீசுந்தராட்சி அம்மன்கோயிலில் சித்திரை மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையையொட்டி அம்மனுக்கு 108 வகையான வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் மற்றும் அலங்கார திபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது
ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினார்புரம் அருள்மிகு ஸ்ரீசங்கரலிங்க சுவாமி உடனுறை ஸ்ரீ கோமதி அம்பாள் கோயிலில் சித்திரை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்று காலை 6 .30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம், தீபாராதனையும்,8.30 மணிக்கு நடராஜருக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பிறப்பை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலஙகார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


