தூத்துக்குடி இராஜபாண்டி நகரில் புதிய நியாயவிலை அங்காடியை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 49வது வார்டுக்கு உட்பட்ட இராஜபாண்டி நகர் பகுதி பொதுமக்களின் கோரிக்கையான புதிய நியாயவிலை அங்காடியை இன்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி தெற்கு மண்டலத் தலைவர் பாலகுருசாமி, பகுதிச் செயலாளர் இராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் வைதேகி பலவேசம், வட்டச் செயலாளர் மூக்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


