தூத்துக்குடி மக்களை இழிவாக பேசியதாக தமிழக ஆளுநருக்கு எதிராக சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் பேராடத்தை இழிவு படுத்தி பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற லியுறுத்தியும் தூத்துக்குடி விவிடி ரோடு. டூ.வி.புரம் சந்திப்பில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் நாராயணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று, மக்களைத் தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட வைத்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதிர்ச்சியளிக்கிறது. துளியும் பொறுப்புணர்வின்றி, குடிமைப்பணி மாணவர்கள் மத்தியில் நச்சுக்கருத்தை இழிவுப்படுத்திப் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. போர்க்குணத்தையும், போராட்ட உணர்வையும் மரபியல் குணங்களாக பெற்ற தமிழர்களை, பணத்தை வாங்கிக்கொண்டு போராடுவதாகக் கொச்சைப்படுத்தி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஆளுநருக்கு எதிராக முழக்கமிட்டனர்.


