தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஏப்ரல் 14ம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடுப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் அறிவித்ததையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் ‘சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் அந்தோணியம்மாள் உட்பட காவல்துறையினர் மற்றும் காவல்துறை அலுவலக அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரி குமார், அமைச்சுப்பணி அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரியப்பன், மயில்குமார் உட்பட உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


