ஆழ்வார்திருநகரி ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊராட்சி நிதியில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கச்சினாவிளை ஊராட்சியில் புன்னை நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார்ச்சாலை பணியினை மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி உமரிசங்கர் ஆய்வு செய்தார்.
மேலும் வனத்திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு தினசரி சுமார் 2000 பக்தர்கள் வந்து செல்லும் நிலையில் அவர்களுக்காக குடிநீர் வசதி செய்து தரும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதையும் ஆய்வு செய்து உடனடியாக கோவில் வளாகம் பகுதியிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து குடிநீர் வினியோகம் செய்து தருவதாக உறுதி அளித்தார்.
ஒன்றிய பெருந்தலைவர் ஜனகர், மாவட்ட ஊராட்சி செயலர் ஜெயஸ்ரீ, வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா, ஊராட்சி மன்ற தலைவர் கிங்ஸ்டன், ஒன்றிய பொறியாளர் வெள்ளப் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


