தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமையில், எஸ்பி பாலாஜி சரவணன் முன்னிலையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று மனு கொடுக்க வந்த 24 மனுதாரர்கள் தங்கள் குறைகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ் குமார், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் ஆகியோரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த உயரதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.


