தூத்துக்குடி மாநகரில் அதிமுக சார்பில் 5 இடங்களில் கோடை கால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார் அதன்படி தூத்துக்குடியில் தொடர்ந்து நீர் மோர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் திறந்து வைத்து வருகின்றார். இந்நிலையில் நேற்று 12.04.2023 ஒரே நாளில் 5 இடங்களில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தல்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழவகைகள், கூல்டிரிங்ஸ், தண்ணீர்பழம், வெள்ளரி, மோர் போன்றவைகளை வழங்கினார்.
தூத்துக்குடி 3வது மைலில் மேற்கு பகுதி அதிமுக செயலாளர் முருகன் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் இளநீர், பழவகைகள், தண்ணீர்பழம், தர்பூசணி ஜூஸ், கிர்ணி, வாழைப்பழம், வெள்ளரி, ரோஸ்மில்க், மோர் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி அதிமுக அலுவலகத்தில் பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் கரும்புச்சாறு, ஐஸ்கிரிம், பழவகைகள், தண்ணீர்பழம், வாழைப்பழம், வெள்ளரி, தேங்காய்தவுன், தென்னங்கன்று, ரஸ்னா, ரோஸ்மில்க், மோர் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தின் முன்பு முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் மாம்பழம், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழவகைகள், தண்ணீர் பழம், ரோஸ் மில்க், நலிவடைந்த பொதுமக்களுக்கு அரிசி பை, சேலை போன்றவைகளை வழங்கினர். திரேஸ்புரத்தில் கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் முன்னாள் துணை மேயர் சேவியர் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் பழவகைகள், தண்ணீர்பழம், வாழைப்பழம், ரஸ்னா, ரோஸ்மில்க், மோர் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். டூவிபுரத்தில் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலில் ரோஸ் மில்க் மற்றும் தண்ணீர் பழம் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ்.சேகர், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா வக்கில் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர் பொன்ராஜ், நட்டார் முத்து, சார்பு அணி செயலாளர்கள் அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, இலக்கிய அணி நடராஜன், மாணவரணி பில்லா விக்னேஷ், சிறுபாண்மை பிரிவு கே.ஜே.பிரபாகர், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர்கள் ஜோதிமணி, சத்யா லெட்சுமணன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரு மணி, சுகந்தன் ஆதித்தன், நிர்வாகிகள் திருச்சிற்றம்பலம், வலசை வெயிலுமுத்து, வக்கில் முனியசாமி, சரவண பெருமாள், நம்பிராஜன், மனுவேல்ராஜ், பி.ஜே.சி. சுரேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


