ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வரதராஜபுரம் வரதராஜ பெருமாள் கோயில் திருப்பணி இன்றி புதர்மண்டி கிடந்தது. இந்த கோயிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையில் ஆழ்வார்திருநகரி நிர்வாக அதிகாரி அஜீத் இந்த இடங்களை மீட்க நடவடிககை எடுத்தார். இதையட்டி ஆலயங்களின் தாசில்தார் ஈஸ்வரன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் இடங்களை அளவீடு செய்து கொடுத்தனர். அதன்பின் மூன்றரை ஏக்கர் நிலத்தில் உள்ள முள்செடிகளை அகற்றி சீர் செய்தனர். மேலும் புதர் மண்டி கிடந்த கோயிலையும் சீரமைக்கும் பணி துவங்கியது. இதனால் இந்த பகுதியில் உள்ள பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


