ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழிகுடியில் மிகவும் பழமையான வெங்கடேசபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் தற்போது பராமரிப்பு இன்றி சிதிலிடைந்து காணப்பட்டது.
இந்த கோயிலில் திருப்பணி செய்து கும்பாபிசேகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்த கோயிலில் திருப்பணி செய்ய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையினர் சார்பில் 43 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திருப்பணி இன்று பூமி பூஜையோடு தொடங்கியது.
இந்த திருப்பணியை ஆழ்வார்திருநகரி ஜீயர் எம்பெருமானார் சுவாமிகள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ராமனுஜம்சுவாமிகள், தக்கார் மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி அஜீத், டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன், சற்குணம், கவுன்சிலர் சுடலைமுத்து, சமூக சேவகர் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விரைவில் திருப்பணி துவங்கி கும்பாபிசேகம் நடைபெறும் என அறநிலையத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


