ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டத்தை சுற்றிலும் தாமிரபரணி நதியின் கரையோரத்தில் பெருமாளுக்கூறிய நவதிருப்பதி கோவில்கள் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் முதலாவது கோயிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் யுகாதி பண்டிகை முன்னிட்டு சோபகிருது வருஷ பஞ்சாங்கம் வாசித்த நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனமும், புதிய வஸ்திரம் சாத்துதலும், 10 மணிக்கு நாலாயிர திவ்ய பிரபந்த கோஷ்டியும் நடந்தது. தொடர்ந பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் மாலை 3 மணிக்கு தாயார்கள் வைகுண்ட நாயகி சோரநாத நாயகி, ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் கள்ளபிரான் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சயனகுறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதன் பின்பு திருவாராதனம் நடந்தது. தொடர்ந்து தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி சோபகிருது வருஷ பஞ்சாங்கத்தை வாசித்தார். அதில் சோபக்கிருது ஆண்டில் உலகம் செழிக்கும், கோபம் குறைந்து, குணம் பெருகும், மழை பெய்யும், நல்ல சுப காரியம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது.


