சாத்தான்குளம் அருகே மொபெட் மீது பைக் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆலங்கிணறு சென்னிவீரன்தட்டு ஓத்தவீட்டைச் சேர்ந்தவர் மு. வேலையா (70) முன்னாள் திமுக கிளை செயலரான இவருக்கு மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உள்ளனர். மனைவியும், பிள்ளைகளும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். வேலையா, ஆலங்கிணறு விலக்கில் உள்ள டீக்கடைக்கு வந்து மொபெட்டில் விட்டு வீடு திரும்பினாராம்.
அப்போது கல்லூரி மாணவர்களான சின்னமாடன்குடியிருப்பு சுடலைமணி மகன் அரவிந்த் (20), அம்பலசேரி முத்துராஜ் மகன் நவீன்ராஜ் (21) ஆகிய இருவரும் ஒரே பைக்கில் நெல்லை மாவட்டம் கள்ளிக்குளம் கல்லூரிக்கு சென்றனர். ஆலங்குளம் விலக்கில் வந்தபோது வேலையா ஓட்டி வந்த பைக் மீது இவர்களது பைக் பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கியெறியப்பட்டதில் பலத்த காயமடைந்த வேலையாவை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பைக்கில் வந்த அரவிந்த், நவீன்ராஜ் இருவருக்கும் லேசான காயம் அடைந்தனர். இகுகுறித்து வேலையா உறவினர் ச. அழகேசன் (56) சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் நிலைய முதல்நிலை காவலர் ஜெயஸ்ரீ வழக்குபதிந்தார் காவல் ஆய்வாளர் முத்து விசாரித்து வருகிறார்.


