தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாப மங்கலத்தில் அமைந்துள்ள ஶ்ரீ குமர குருபரர் சுவாமிகள் கலைக் கல்லூரியில் இன்று பார்கண்ட பாவை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு
கல்லூரி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் வாழ்த்திப் பேசினார்.
மூன்றாம் ஆண்டு விலங்கியல் துறை மாணவிகள் சண்முகசுந்தரி அன்னலட்சுமி ஆகியோர் கடவுள் வாழ்த்து பாடினர்.
முதலாம் ஆண்டு முதுகலை பொருளியல் துறை மாணவி மூக்கம்மாள் வரவேற்று பேசினார்.
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசுகையில், சமதர்ம சமுதாயம் அமைய அனைவரது பங்களிப்பும் அவசியம், 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கான கருப்பொருளான சமமான பகிர்வு என்பதை தாண்டி இந்த உலகில் எல்லாவற்றையும் சமத்துவமாக மாற்றுவதற்கு அனைவருக்கும் தேவையான பகிர்வைவும் பங்களிப்பையும் கொடுக்க வேண்டும். இன்றைய மாணவிகள் தான் நாளைய இந்தியாவின் தலைவர்கள் என பாராட்டி பேசினார்.
மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் பல்வேறு வெற்றிகளை குறித்து வரும் மாணவி செண்பகவள்ளிக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் ஆண்டு இளங்கலை கணிதவியல் துறை மாணவி ஷாலினி நன்றி கூறினார்.


