ஸ்ரீவைகுண்டம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள இசவன்குளம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமர் இவரது மகள் ஆறுமுகலட்சுமி (19), இவர் பத்மநாபமங்கலத்தில் உள்ள கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கல்லூரிக்கு சென்றுள்ளார். அதன் பின்ன திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை ராமர் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அண்ணராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


