மேல ஆழ்வார் தோப்பு
பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்
ஸ்ரீவைகுண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கிராம உதயம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் மேல ஆழ்வார் தோப்பில் நடந்தது. பெண்கள் மற்றும் உரிமைகள் என்ற தலைப்பில் நடந்த முகாமிற்கு ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மயில்சாமி தலைமை தாங்கினார். மேலஆழ்வார்தோப்பு கிராம உதய மேலாளர் வேல்முருகன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ஜோதிலெட்சுமி, ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மகாராஜன், ஸ்ரீவைகுண்டம் மாவட்ட உரிமையியல் நீதிபதி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் முத்துலெட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலஆழ்வார்தோப்பு கிராம உதய தனி அலுவலர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். இளநிலை உதவியாளர் அருள்மணி ராஜ், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற சட்ட தன்னார்வலர் கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


