நெல்லையிலிருந்து வெளிவரும் நெல்லை டைம்ஸ் பத்திரிக்கையில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதி வெளிவந்த தொடர் “பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள். தொடர்ந்து 53 வாரங்களாக வெளிவந்த தொடர் தற்போது தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. முதல் பாகம் ரூ220 ஆகவும், இரண்டாம் பாகம் ரூ250 ரூபாயாகவும் விற்கப்பட்டு வருகிறது. இந்த நூலைப் பெற 1800 425 7700, வாட்ஸ் அப் எண் 7550009565யை தொடர்பு கொள்ளலாம். ஆசிரியர் எண் 8760970002.
செய்துங்கநல்லூரில் சந்தை வளாகத்தில் வைத்து முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய “பொருநை ஆற்றில் புதைந்த ரகசியங்கள் பாகம் 1” என்ற நூல் வெளியிட்டு விழா நடந்தது. தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா இந்த நூலை வெளியிட்டுள்ளது. இரண்டு பாகமாக இந்த நூல் வெளிவந்துள்ளது. இதன் இரண்டாவது பாகம் ஏற்கனவே நெல்லை புத்த கண்காட்சியில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் நூலை கிள்ளி குளம் வேளாண்மை பண்ணை அதிகாரி வனிதா வெளியிட்டார். தெற்கு காரசேரி கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஏற்புரை வழங்கினார். வி.கே.புரம் அப்பராணந்தா, நாட்டார் குளம் எஸ்.கே.திருப்பதி, சுடலை மணிச்செல்வன், மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் அபிஷ்விக்னேஷ் உள்படப் பலர் கலந்துகொண்டனர்.


