நேற்றைய நாளில், 05/3/2023 நெல்லை பொருநை புத்தகத் திருவிழாவின், 9 – வது நாளில் எமது “கல்வெட்டு” என்கிற உளவியல் மர்ம நாவல் வெளியீட்டு விழா நடைபெற்றது!
பொருநை இலக்கிய வட்டத்தின் காப்பாளர் அய்யா தளவாய் நாதன் அவர்கள் வெளியிட , முனைவர் பேராசிரியர், குரு .சண்முகநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்!..,
நூலின் தன்மை பற்றிய திறனாய்வை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உயிரியல் தொழில் நுட்பத் துறை பேராசிரியர் சுதாகர் அவர்கள் மிகத் தெளிவாக திறனாய்வு செய்தார்!..,
நூலின் மதிப்புரையை, தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியர் ரில்பர்ட் ஜனார்த்தனன் அவர்கள் சிறப்பாக மதிப்புரை வழங்கினார்கள்!…,
மேலும், நூலின் சிறப்பு பற்றிய வாழ்த்துரையினை வரலாற்று ஆசிரியர் முத்துலாங்குரிச்சி காமராசு அவர்களும், கவிஞர் பாப்பாக்குடி, இரா.செல்வமணி அவர்களும், கவிஞர், கோ.கணபதி சுப்பிரமணியம் அவர்களும், தேசிய நல்லாசிரியர், சு .செல்லப்பா அவர்களும், கவிஞர் சு .முத்துசாமி அவர்களும், வழங்கினார்கள்!..,
அனைவரையும் வரவேற்று, ஒருங்கிணைக்கும் ஒழுங்கினை, நல் . நூலகர் அ. முத்துகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாகச் செய்தார்!
நிகழ்ச்சியின் முழு ஆற்றலும், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர் நாறும்பு நாதன் அவர்கள் இயக்கினார்!..,
இறுதியாக நூலாசிரியரின் மகன், மா.வெற்றி பாண்டியன் அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை இனிதே நிறைவு செய்தார்!


