ஏரல் சந்திரா தியேட்டர் பின்புறம் அமைந்துள்ள விஸ்வகர்மா கலை வளாகத்தில்
தமிழக திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ,
ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் அவர்களின் 114 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
ஏரல் விஸ்வகர்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன் ஆச்சாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சாயர்புரம் சமூக பாடகர் கந்தன் ஆச்சாரி பாகவதர் பாடல்களை பாடினார்.
யோகா ஆர்வலர் தென்கரை மகாராஜன் இனிப்பு வழங்கினார்.சமூக ஆர்வலர் கற்குவேல் ஐயப்பன், தச்சுக் கலைஞர் மகாராஜன்,மாணவர் கார்த்திக் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடு செய்த ஏரல் ராஜன் நன்றிக் கூறினார்.


