தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “சர்வதேச சிறுதானிய வருடம் 2023ஐ கொண்டாடும் விதமாக “வல்லமை மிக்க சிறுதானியங்கள் மற்றும் மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய உணவு செய்முறைகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் சுப்புலட்சுமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிவகாசி “தாய்வழி இயற்கை உணவகத்தின்” நிறுவனர் ஜி.மாறன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாம் அமர்வில் சிறுதானிய உணவுகளில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நலன்கள் பற்றி மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியின் இரண்டாம் அமர்வில் தினைலட்டு, கம்பு புட்டு, குதிரைவாலி கஞ்சி, ராகி சேமியா, வரகு அரிசி முறுக்கு, சாமை அரிசி பாயாசம் போன்ற உணவுகளை செய்யும் முறை பற்றி பயிற்சி அளித்தார்.
மாணவிகளுக்கு தங்களது அன்றாட உணவில் சிறுதானியங்கள் பயன்படுத்துவதற்கு ஊக்கமளிப்பதாக இந்நிகழ்ச்சி இருந்தது. இருநூறு மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏ.பி.சி. மகளிர் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியைகள் செய்திருந்தார்கள்.


