திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பஞ்சாயத்துக்குட்பட்ட ருக்மணியம்மாள்புரம் கிராமக் குளக்கரையில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான வழிபாட்டுத்தலமாக ‘கான்சா மாடன் தர்க்கா’ அமைந்திருக்கிறது.
‘கான்சா’ என்பது இஸ்லாமியப் பெயர், ‘மாடன்’ என்பது இந்த ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர். இவ்விரண்டும் இணைந்து இந்து – முஸ்லிம் ஒற்றுமையின் அடையாளச் சின்னமாக அமைந்திருக்கும் இங்கு, ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவதும், ஆடு, கோழி போன்றவைகளைப் பலியிட்டு வழிபடுவதும் நடைபெறுகிறது. ஊத்துமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்து வரும் இசுலாமியச் சமயத்தினர், ஆடி மாதம் முதல் நாள் மாலையில் இங்கு கொடி ஏற்றிச் சந்தனக்கூடு திருவிழாவை நடத்துகின்றனர்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு… கீழ்க்காணும் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.
http://www.muthukamalam.com/tidbits/p214.html


