தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் படியும் மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் சாமுவேல்ராஜ் ஆகியோரின் ஆலோசனையின் படியும் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழசெக்காரக்குடி தொடக்கப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட கற்போருக்கான பயிற்சி இன்று நடந்தது.
கிராம நிர்வாக அலுவலர் கனகலட்சுமி எழுதுதல் படிப்பதற்கான தேவைகள் குறித்தும் கிராமங்களின் சேவைகள் குறித்தும் கற்போருக்கு எடுத்துரைத்தார். கிராம சுகாதார செவிலியர் ஆனந்தி சுகாதாரமாக இருப்பதற்கு கற்போருக்கு ஆலோசனை வழங்கினார்.
அஞ்சல் துறை அலுவலர்களான ஜேக்கப், சாந்தி ஆகியோர் சேமிப்பு திட்டங்கள் குறித்தும் சேமிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கற்போருக்கு எடுத்துரைத்தனர். ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பெருமாள் எழுத்தறிவு பெறுவதற்கான தேவைகள் குறித்து எடுத்துக் கூறினார். மகளிர் சுய உதவிக்குழு தலைவர் முத்துலட்சுமி சுய உதவி குழுவின் சிறு சேமிப்பு குறித்து எடுத்துக் கூறினார்.
புதிய பாரத தன்னார்வலர்கள் கனகவள்ளி, சந்தன மாரியம்மாள் ஆகியோர் எழுத்தறிவு திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துக் கூறினர். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கீழ செக்காரக்குடி தலைமை ஆசிரியர் கணேசன் மற்றும் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்திருந்தார்.
இதே போல் கருங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட உழக்குடி, கருங்குளம், முத்தாலங்குறிச்சி, திருவரங்கப்பட்டி, மணக்கரை ஆகிய கிராமங்களில் நடந்தது.
கருங்குளம் வட்டார புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் பீபேகம் கலந்து கொண்டார்.


