வல்லநாடு பாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் மழைக்கால நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அறிவுறுத்தலின்படி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வழிகாட்டுதலின் பேரில் பள்ளிகளில் மழைக்கால நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி வல்லநாடு பாரதி மழலையர் தொடக்கப்பள்ளியில் மழைக்கால நோய்கள் விழிப்புணர்வுக் கூட்டம் இன்று நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ரத்னம் தலைமை வகித்தார். பள்ளி நிறுவனர் பாரதி சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் செல்வகுமார் மழைக்கால நோய்களும் சிகிச்சைகளும் பற்றி மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு உரையாற்றினார். கூட்ட முடிவில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது.


