ஸ்ரீவைகுண்டம் வட்டார கிளை நூலகத்தில் 55வது தேசிய நூலக வாரவிழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை எதிரே அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வளர்ந்த வீடு அரசு வட்டாரகிளை நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் வைத்து 55 வது தேசிய நூலக வாரவிழா மற்றும் புத்தக கண்காட்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் நூலகத்தில் அமைந்துள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவரும் கலைமகள் யோகா மாஸ்டருமான இசக்கிமுத்து தலைமை வகித்தார். நல்லாசிரியர் விருது பெற்ற குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மாணிக்கம், குமரகுருபரர் சுவாமிகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை ராணி, ஆதி குமரகுருபரர் பெண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியை விஜயலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் கண்ணன் வரவேற்றார். ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இதனை தொடர்ந்து பேச்சுபோட்டி விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து ஆசிரியர் மாணிக்கம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலா ரூ.1000செலுத்தி நூலகத்தில் புரவலராக தங்களை சேர்த்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நூலகர்கள் கண்ணன், நூலக உதவியாளர்கள் இசக்கிதுரை, விஜயகுமார் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் நூலகர் கண்ணன் நன்றி கூறினார்.


