சுவாமி விவேகானந்தர் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டு சிகாகோ நகரில் நடந்த சமய மாநாட்டிற்கு அவரை அனுப்பி வைத்து அதற்கான அனைத்துப் பொருட் செலவையும் ஏற்றுக் கொண்ட இராமநாதபுர சமஸ்தான மன்னர் ராஜா பாஸ்கர சேதுபதியின் 154வது பிறந்தநாள்.
ராஜா இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிக்கும் அவர் தம் மனைவி ராணி முத்தாத்தாள் நாச்சியாருக்கும் முதல் மகனாக நவம்பர் 3 ஆம் தேதி 1868-ல் பிறந்தவர்தான் ராஜா பாஸ்கர சேதுபதி. இவருடைய முழுப்பெயர், “ஹிரன்யாகர்பயாஜி ரவிகுல முத்து விஜய ரகுநாத பாஸ்கர சேதுபதி” என்பதாகும்.
1888 ல் சிவ பாக்கியம் நாச்சியாரை மணந்து கொண்ட கையோடு , ஏப்ரல் 3 1889ல் மகாராஜா பட்டம் பெற்று இராமநாதபுரம் ஜமீனின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விவேகானந்தர் பாம்பன் துறைமுகத்தில் வந்து இறங்கினார். அப்போது மன்னர் பாஸ்கர சேதுபதி விவேகானந்தரின் பாதங்களைத் தரையில் படவிடாமல் தன் சிரசில் வைத்து இறங்குமாறு கேட்டுக்கொண்டாராம். பாஸ்கர சேதுபதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்புக் கொடுத்து 40 அடி உயரத்தில் ஒரு நினைவுத்துணையும் எழுப்பினார். அதில் “சத்யமேவஜெயதே” என்ற வரிகளைப் பொறித்தார்.
அதுவே 50 வருடங்களுக்குப்பின் இந்திய நாட்டின் கொள்கையாக உருவெடுத்து அசோகச் சின்னத்தில் சேர்க்கப்பட்டது.
மன்னர் பாஸ்கர சேதுபதியின் ஆன்மிக ஞானத்தை மதித்தே அவரை ” கலியுக ராஜரிஷி” என்று விவேகானந்தர் அழைத்தார்.
தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே சுவாமிநாத அய்யர் அவர்களுக்கும் உறுதுணையாக இருந்து பல உதவிகளைச்செய்துள்ளார் .
1903-ல் தனது 35 வயதிலேயே இயற்கை எய்தினார்


