வல்லநாடு கஸ்பாவில் துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்க துவக்கவிழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வல்லநாடு கஸ்பாவில் துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் இன்று இளைஞர் செஞ்சிலுவை சங்கம் துவக்க விழா நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவை சங்க இயக்குனர் செய்யது உம்ராஹத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துளசி கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக அபிநயா கல்யாணி நியமிக்கப்பட்டார்.
விழாவிற்கான ஏற்பாட்டினை இளைஞர் செஞ்சிலுவை சங்கத்தின் மாணவிகள் செய்திருந்தனர்.


