தொல்காப்பியம் என்னும் நூல் தொல்காப்பியர் எழுதியது. தொல்காப்பியர் அகத்தியரின் சீடர். இவர் எழுதிய நூல் அகத்தியம். அகத்தியம் எனும் நூல் தமிழின் முதல் இலக்கண நூல் . ஆனால் நம்மிடையே அகத்தியம் எனும் நூல் இல்லை. ஆனாலும் தொல்காப்பியர் பல இடங்களில் அகத்தியம் எனும் நூலை மேற்கோள் காட்டியிருப்பதால் அகத்தியம் மேன்மை பெறுகிறது. அது தொல்காப்பியத்தின் முந்தை நூல் என பெருமை கொள்கிறது.
தொல்காப்பியத்தினை பொறுத்தவரை – தொன்மையான தமிழ் இலக்கண உரை மற்றும் தமிழ் இலக்கியத்தின் பழமையான இலக்கியப் பணியை பட்டியலிட்டுஇருக்கிறார்கள். இந்த நூல் சங்க காலத்தைச் சேர்ந்தது. – பண்டைய தமிழகத்தின் நிலப்பரப்புகளை திணை என்பர் . தினை என்பது ஒரு வகையான கவிதை முறை அல்லது கருப்பொருள் எனலாம். மலர்கள், மரங்கள், வனவிலங்குகள், தட்பவெப்பநிலை, அப்பகுதியின் புவியியல் மற்றும் அவற்றில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஐந்து திணைகள் விவரிக்கப்பட்டுள்ளன.
ஐந்து திணைகளை நாம் குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல், பாலை என பட்டியலிடுவோம்.
‘குறிஞ்சி’ – என்பது மலையும் மலை சார்ந்த இடங்களும் என்று கூறப்படும் இடங்களாகும். மலைச் சரிவுகளையும், அதனை பூக்களால் அலங்கரிக்கும் மலைப் பகுதிகள் குறிஞ்சி நிலமாகும். – காடுகளில் வசிப்பவர்கள் தேன் சேகரித்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவார்கள். நமது தாமிரபரணியை பொறுத்தவரை பொதிகை மலையையும் காணிகள் வாழும் இடத்தினையும் குறிஞ்சி என்று அழைக்கிறோம்.
‘முல்லை’ என்பது காடும் காடு சார்ந்த இடமாகும். அதாவது அருவிகள், குளங்கள் மற்றும் ஏரிகளின் நிலம். பால்பண்ணை உள்ளிட்ட மேய்ப்பர்களின் நிலமாக முல்லை சித்தரிக்கப்பட்டுகிறது. பெரும் பாலுமே தாமிரபரணி கரையில் மேய்ச்சல் நிலங்கள் மிக அதிகமாக உள்ளது.
‘மருதம்’ என்பது வயலும் வயல் சார்ந்த இடமாகும். தாமிரபரணியை பொறுத்தவரை இரண்டாவது நெற் களஞ்சியமாக என தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் போற்றப்படுகிறது. எனவே வயலுக்கு இங்கே பஞ்சமே இல்லை. தொல்காப்பியத்தில் வயல்களை உழுவது போல் சித்தரிக்கப்படுகிறது.
‘பாலை’ என்பது வறண்ட நிலப்பரப்பாகும். சிறிய வளங்கள் மற்றும் கொள்ளையர்களின் மறைவிடமாகும். தாமிரபரணி கரையை பொறுத்தவரை பாலை என்பது தேரிக்காடாகும். குரும்பூர் குப்புசாமி என்ற எழுத்தாளர் தாமிரபரணி என்பதற்கு மற்றுமொரு பெயர் செவ்வாறு என்றும் , அந்த நதியின் ஓட்டம் தான் பல இடங்களில் ஓடி செம்மண்ணை கொட்டி, அது தான் பிற்காலத்தில் தேரிக்காடாகி விட்டது என்கிறார். அதை என்னுடைய தவழ்ந்து வரும் தாமிரபரணி நூலில் கூறியுள்ளேன். இந்த தேரிக்காடு ஒரு காலத்தில் எதற்கும் உதவாமல் இருந்தது. தற்போது இந்த தேரிக்காடு முந்திரி போன்ற விளை நிலங்களுடன் காட்சியளிக்கிறது. தேரிக்காட்டை பொறுத்தவரை திருநெல்வேலி மாவட்டம் திசையன் விளை, பணங்குடி பகுதியிலும் தூத்துக்குடி மாவட்டம் சாயர் புரம், தேரிக்குடியிருப்பு, நாசரேத் பகுதியிலும் உள்ளது. இந்த வகையான மண் வேறு எப்பகுதியிலும் காணப்படவில்லை என்பது சிறப்புத்தான்.
‘நெய்தல்’ என்பது கடலும் கடல் சார்ந்த இடமாகும். கடற்பரப்பு மற்றும் கடற்கரைகளின் நிலத்தை சித்தரிக்கிறது, நண்டுகள் தத்தளிக்கும், மீன்களின் நறுமணத்தால் நிரப்பப்பட்ட காற்று மற்றும் மீனவர்களின் சிதறிய குக்கிராமங்கள். ஓருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, உவரி, பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை , அமலி நகர், திருச்செந்தூர் , வீரபாண்டிய பட்டணம், புன்னக்காயல், தூத்துக்குடி, வைப்பாறு ,வேம்பாறு, தருவைகுளம் என கடலும் கடல் சார்ந்த இடமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்து ‘தினைகள்’மூலமாக அனைத்து பெருமைகளுடன் மக்களுக்கு கிடைக்கிறது. மொத்தத்தில் சொல்லப்போனால் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் அகஸ்தியமலை மலைகள் கரடுமுரடான மலைப் பகுதியில் குறிஞ்சி மற்றும் கால்நடைகள் மேய்க்கும் கிராமங்களை ஒட்டிய மலையடிவாரத்தில் முல்லை அல்லது காடுகள் உள்ளன. மலைகளில் இருந்து வற்றாத தாமிரபரணி என்ற பழமொழியை உள்ளடக்கிய நீரோடைகளும் ஆறுகளும் மருதம் சித்தரிக்கும் பசுமையான வயல்களுக்குத் துணை நிற்கின்றன. ஆழமான சிவப்பு மண் மற்றும் பனை மரங்கள் பதித்த மணல் திட்டுகளுடன் தேரிக்காடு பகுதியின் பாளையில் நிலப்பரப்பு உடைகிறது. நெய்தல், பாறைகள் நிறைந்த கடற்கரைகளைக் கொண்ட கடற்கரை, கடலோர நிலப்பரப்புக்கு பெருமை சேர்க்கிறது. என தாமிரபரணி தடயங்கள் என்ற நூல் நமக்கு தகவல்களை மிக சிறப்பாக தருகிறது. இந்த நூலில் மற்றுமொரு தலைப்பு பண்பாடு.
இந்த நூலில் பண்பாடு குறித்து கீழ்கண்ட வாறு சித்தரிக்கிறார்கள்.
10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர் அவ்வையாரின்-, “வரப்புயர நீர் உயரும். நீர் உயர நெல் உயரும். நெல் உயரக் குடி உயரும் . குடி உயரக கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்” என்ற செய்யுள், இயற்கை வளங்களுடன் தொடர்புடைய செழுமையின் அடையாளங்களைச் சித்தரிக்கிறது. வளமான இயற்கை வளங்கள் இந்த பிராந்தியத்தின் மீது வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளைச் சேர்ந்த பல வம்சங்களின் படையெடுப்பிற்கு வழிவகுத்தன. இப்பகுதி சங்க இலக்கியங்களில் “தென்பாண்டி சீமை” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதனால் தான் நான் தலா 1000 ம் பககத்தில் தென்பாண்டிச்சீமையிலே பாகம் 1, தென்பாண்டிச் சீமையிலே பாகம் &2 என இரண்டு நூல்களை எழுதியுள்ளேன்.
பாண்டிய மன்னர்கள் இப்பகுதியை கி.மு 3 முதல் கி.பி 3 வரையிலும், பின்னர் கி.பி 575 முதல் மதுரை இராச்சியத்தின் ஒரு பகுதியாகவும் ஆட்சி செய்தனர். பாண்டியர்களைத் தொடர்ந்து, சோழர்கள், நாயக்கர்கள் மற்றும் விஜயநகர வம்சத்தினர் கிபி 849 மற்றும் 1736 க்கு இடையில் இப்பகுதியை ஆட்சி செய்தனர். கிபி 1757 முதல் 1801 வரை, இது ஆங்கிலேயர்களின் கைகளில் விழுவதற்கு முன்பு ஆற்காடு நவாப்பின் கீழ் இருந்தது.
பல்வேறு காலகட்டங்களில் இருந்த ஆட்சியாளர்கள் கலை, கட்டிடக்கலை மற்றும் கலாச்சார தாக்கங்கள் வடிவில் இந்த நிலத்தில் தங்கள் அடையாளத்தை விட்டு, விட்டு, இங்குள்ள ஏராளமான கோயில்கள், மலைகளில் இருந்து வரும் நீர் மற்றும் ஐந்திணையில் உள்ள வளமான இயற்கை வளங்களின் அடையாளங்களை சுவடுகளாக வைத்துள்ளனர். ஆட்சியாளர்களின் அடுத்தடுத்து இப்பகுதியில் கால்வாய் மற்றும் குளங்கள் அமைப்புகளை உருவாக்கினர், இதன் மூலம் அவர்கள் பயிர்களை பயிரிட உதவினார்கள். இந்த நீர் மேலாண்மை மற்றும் விநியோகம் இப்பகுதியின் செழிப்பை மேலும் சேர்த்தது. வறண்ட பகுதிகள் கூட பனை தோட்டங்கள் மற்றும் பிற கடினமான பயிர்கள் மூலம் நன்கு பயன்படுத்தப்பட்டன. கூடுதலாக கால்நடை வளர்ப்பு, ராஜ்யங்களின் குடிமக்கள் செழிப்பு மற்றும் வாழ்வாதாரத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்காக. இப்பகுதியில் உள்ள பண்டைய துறைமுகங்கள் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இப்பகுதியில் தொலைதூர நாடுகளுடன் வர்த்தகம் செழித்து வளர்ந்ததை இது காட்டுகிறது. 1800 களின் முற்பகுதியில் ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் தங்கள் தளத்தை நிறுவினர். இந்தப் பிராந்தியத்துடனான அவர்களின் ஈடுபாட்டின் ஆரம்பத்திலேயே, இந்த பகுதிகளில் செழித்து வளர்ந்தது. வளமான மற்றும் மாறுபட்ட சுற்றுச்சூழல் அமைப்புகளின் திறனை அவர்கள் உணர்ந்து, தங்களுக்கு விருப்பமான பல்வேறு பொருட்களை தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோவிலின் கம்பீரமான கோபுரம் – செல்வம் மற்றும் செழிப்பை வெளிப்படுத்தும் இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம். இதுபோலவே திருப்புடை மருதூர் கோபுர உள்பகுதியில் உள்ள சிற்பங்கள். நம்பியாற்றங்கரையில் உள்ள திருக்குறுங்குடி கோபுர சிற்பங்கள், கிருஷ்ணாபுரம் கலைச் சிற்பங்கள், நெல்லையப்பர் கோயில் சிற்பங்கள் என அடுக்கிகொண்டே போகலாம்.
தொடந்து தாமிரபரணி தடயங்கள் நூலில் உள்ள வரலாறு குறித்து நாம் காணுவோம்.
தென்பாண்டிச் சீமையின் ஒரு பகுதியாக இருந்து, பாண்டியர்கள், சோழர்கள், சேரர்கள் மற்றும் நாயக்கர்கள் ஆட்சி செய்த பகுதியிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ‘தின்னவேலி’ ஆனது. இப்பகுதியில் நடந்த ஏராளமான போர்களின் மூலம் இரத்தக்களரியைக் கண்டது. பாண்டிய ஆட்சிக்குப் பிறகு, பதினாறாம் நூற்றாண்டில், இந்த நிலம் நாயக்க மன்னர்களின் கீழ் இருந்தது, மேலும் விஜயநகரப் பேரரசுக்கு ஆளுநர்கள் வரி செலுத்தினர். விஜயநகர முடியாட்சியானது. மூன்று அடுக்கு ஆட்சி முறையைப் பின்பற்றியது. கி.பி 1623 முதல் 1659 வரை ஆண்ட திருமலை நாயக்கரின் காலத்தில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி தொடங்கியது. திருமலை நாயக்கர் விரைவில் பேரரசுடனான தொடர்பைத் துண்டித்து, வரி செலுத்துவதை நிறுத்திவிட்டு சுதந்திர அரசை நிறுவினார். இதனால் பாளையங்களை நேரடியாக நாயக்கர் ஆட்சியாளர்களின் கீழ் கொண்டு வந்தார். இதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை இங்கு விரிவுபடுத்துவதற்கு முன் சிறிது காலம் நவாப் ஆட்சி இருந்து வந்தது.
இந்த நூலில் வாழ்வியலை பற்றியும் பேசியுள்ளார்கள். அதைப்பற்றி காண்போம்.
இப்பகுதியின் நிலப்பரப்பு, வானிலை மற்றும் வரலாறு ஆகியவை உள்ளூர் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரங்களின் பரிணாமத்தை வடிவமைத்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்டுள்ளது, அவை வரலாற்றுக் காலத்திலிருந்தே சமூகங்களுக்கு இயற்கை வளங்களைத் தொடர்ந்து அளித்து வருகின்றன. மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள காடுகளால் ஆன மலைகள் காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன. அவை மாவட்டம் முழுவதும் நீர் ஆதாரமாக உள்ளது. நீர் வளம் நிறைந்த பகுதிகளின் கலாச்சாரம், கலை வடிவங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் வறண்ட நிலப்பரப்புகளிலிருந்து வேறு பட்டவை. மேலும், கடலோரப் பகுதிகள் இப்பகுதியின் செழுமையையும் பன்முகத்தன்மையையும் சேர்க்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் கைவினை ப்பொருட்கள், கலைகள் மற்றும் நடன வடிவங்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான கலை நிகழ்ச்சிகளின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பலதரப்பட்ட பாரம்பரிய திறன்கள் பல தலைமுறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த திறன்கள் கடந்த காலத்தில் உற்பத்தி வாழ்வாதாரமாக செயல்பட்டன. இது நாட்டுப்புற வடிவங்களின் முறையான மரபுகள் முதல் கர்நாடக இசை வரை நீண்டுள்ளது. நிகழ்ச்சிகள் இயற்கையின் பின்னணியைக் கொண்டுள்ளன அல்லது நிலப்பரப்பில் உள்ள தெய்வங்கள், மூதாதையர் வழிபாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. கைவினைப்பொருட்கள் பெரும்பாலும் மாவட்டத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களில் இருந்து உருவானவை. ஒரு சில சந்தர்ப்பங்களில், இந்தத் திறன்கள் இந்தியா முழுவதிலும் மற்றும் அதற்கு அப்பாலும் இருந்து வரும் பொருட்களால் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தின் சமையல் பன்முகத்தன்மை மற்றும் தனித்துவம், தலைமுறை தலைமுறையாக வழங்கப்பட்ட கலாச்சாரம், இனம் மற்றும் பாரம்பரிய உணவுகளுக்கான நுழைவாயிலாகும்.
னுன இந்த நூலில் குறிப்பிட்டு பல்வேறு தகவல்களை அள்ளித்தந்துள்ளனர். இந்த நூலை வெளிக்கொண்டு வர மிகவும் பாடுபட்டு பயணித்தவர் மதிவாணன் தான். ஏன் என்றால் இதற்காக என்னிடம் அவர் பல முறை போனில் தொடர்ப்பு கொண்டுள்ளார். அவருடன் ஆங்கிலத்தில் மொழிபெயர்ந்து நூலை வெளிக்கொண்டு வந்த அனைத்து நல் உள்ளங்களுககும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியரும் ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்து எங்களோடு இணைந்து செயல்பட்டுள்ளார். இது வரவேற்கதக்கது.
நான் தொடர்ந்து 35 வருடங்களாக எழுதி வருகிறேன். 60 நூல்களை வெளியிட்டுள்ளேன். எனது நூல்கள் எல்லாம் தமிழில் இருப்பதால் தாமிரபரணியின் புகழை வெளி உலகம் அறியமுடிவதில்லை. எனவே தான் நம் ஊரை பற்றி ஆங்கிலத்தில் குறிப்பு இருந்தால் அதை காணவும் பேசவும் உலகம் முழுவதில் இருந்து ஆள்கள் வருவார்கள். ஆங்கில நூலான டாகடர் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரத்தினை போல் பல நூல்கள் வரவேண்டும். அதற்கான நல்ல ஏற்பாட்டை மாவட்ட ஆட்சி தலைவர் விஷ்ணு உருவாக்கியுள்ளார். அதுவும் வண்ணக்கலரில் ஒரு நூல் வெளிவந்துள்ளது. எனவே இதற்கு உழைத்த அனைவருக்கும் ஒரு சல்யூட் அடித்து விட்டு தாமிரபரணியில் மற்றுமொரு தகவலை நோக்கி பயணிப்போம்.
(பொருநை ரகசியங்களை தேடி பயணிப்போம்)


