எஸ். பி. ஜி க்கான பேராயராக நெல்லைக்கு நியமிக்கப்பட்ட மகாகனம். கால்டுவெல் பேராயர் அவர்கள் இக்காரியத்தில் உடன்படவில்லை. இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. அக்கால எஸ்.பி.ஜி. மிஷனின் தமிழ் நாட்டிற்கான எம் .டி. சி. கமிட்டி மகாகனம் கால்டுவெல் அத்தியட்சர் அவர்களை சடங்காச்சாரங்களை நடைமுறைப்படுத்த கட்டாயப்படுத்தியது. இருந்தபோதும் பேராயர். கால்டுவெல் அவர்கள் இக்காரியத்தில் உடன்பட மறுத்தார் ஆதலால் கால்டுவெல்லை காட்டிலும் சடங்காச்சாரங்களை அதிகமாக நடைமுறைப்படுத்திய கனம். மர்காஷிஸ் அவர்களுக்கு எஸ்.பி.ஜி, எம் .டி .சி. கமிட்டி அதிக முக்கியத்துவம் தந்தது இதனால் பேராயர்.மகாகனம். கால்டுவெல் அவர்கள் தமது இறுதிக்காலத்தில் மிகுந்த மனவேதனை அடைந்ததாக குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.
சி.எம்.எஸ்.மிஷனரி இயக்கத்தின் அடிப்படை கோட்பாடு சடங்காச்சாரம் இல்லாத சுத்த சுவிசேஷம் எனும் சுத்தாங்க சுவிசேஷம் எஸ்.பி.ஜி மிஷன் சடங்காச்சாரங்கள் கொண்டது.
ஆதலால் எஸ்.பி.ஜி மற்றும் சி. எம். எஸ்.மிஷன் சபைகள் இணைப்பால் சுத்தாங்க சுவிசேஷம் எனும் சி.எம்.எஸ். மிஷனின் அடிப்படைக் கோட்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற கவலை கொண்ட சி. எம். எஸ். சபை பெரியோர்கள், சி.எம்.எஸ். சபை குருவானவர்கள் இந்த ஐக்கிய திட்டத்தை ஏற்கவில்லை.
அந்நேரத்தில் சி.எம்.எஸ் மிஷன் கோட்பாடுகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்ற வாக்குறுதிகள் சி.எம்.எஸ்.மிஷன் சபையாருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவை உடனடியாகவே மீறப்பட்டது கோவில்பட்டி சிவிஷி சி.எம்.எஸ். தேவாலய ஆல்டர் திருமேஜையின் மீது சிலுவையும் விளக்குத் தண்டும் வைக்கப்பட்டது.
இந்த தகவலையெல்லாம் கல்லிடைக்குறிச்சி ஜான் ஞானராஜ் நமக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
தோர்ணக்கல் திருமண்டல பேராயர் நியமனம் குறித்து பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட இரு சீனியர் குருவானவர்கள் ஆன
அருட்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் அருட்திரு. சாலமோன் பாக்கியநாதன் ஐயரவர்கள் மட்டும் தான் சுத்தாங்கப் பிரிவினைக்கு முழுகாரணம் என சிலர் கூறுவது சரியான முறை அன்று.
சி.எம்.எஸ். மிஷனரி சங்கம் ஜெபக்குழுவினரால் ( ஜிமீணீனீ கீஷீக்ஷீளீ) உருவானது அந்த ஜெப குழுவினரில்
யி.வி.தேவதாசன்
நி.யி.ஆர்தர்
க்ஷி.யி. டேர்
யி. அன்புடையான்
யி.ஞி.ஆரோன்
க்ஷி.ஷி.அசரியா
ஆகியோர் முக்கியமானவர்கள்.
இந்திய மிஷனரி சங்கம் உருவாகவும் அதன் முதல் மிஷனரியாக 06.04.1904 இல் நெல்லையை விட்டு புறப்பட்டு செல்லவும் முன் வந்தவர் அருட்திரு. சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள், திசையன்விளையை அடுத்த கீரைக்காரன்தட்டு மகாதேவன்குளத்தை பூர்வீகமாகக் கொண்டவரான மருதகுளம் பாக்கியநாதன் உபதேசியார் – நல்லம்மாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தவரான இவர் அக்காலத்திலேயே பட்டதாரி மட்டுமல்லாது 12 மொழிகளை நன்கு கற்று அறிந்தவர். தோர்ணக்கல்லில் சிறப்புற நன்கு மிஷனரி பணிகளைச் செய்தவர்.
பேராயர் அசரியா தோர்ணக்கல் பணித்தளத்திற்குள் (திருமண்டலத்திற்குள்) வரும் முன்பாகவே அங்கு ஏராளமான சபைகளை அவர் கட்டி எழுப்பி இருந்தார். அவரைத் தொடர்ந்து அவரது தம்பி அருட்திரு.சாலமோன் பாக்கியநாதன் பட்டக் கல்வி முடித்து இலங்கையில் கல்லூரி விரிவுரையாளராகப் பணி செய்தவர்
அவரும் மூன்றாவது மிஷனரியாக 1905 இல் தோர்ணக்கல்லில் ஐ.எம்.எஸ்.இல் பணி செய்யச் சென்றார்.
அருட்திரு.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் குருவானவராக, தோர்ணக்கல் பணித்தள தலைமை மிஷனரியாக பணி செய்தபோது குருத்துவ பட்டம் பெறாத நிலையில். பட்டக் கல்வியை நிறைவு செய்யாத நிலையில் சாதாரண மிஷனரியாக தோர்ணக்கல் சென்றவரே மகாகனம். அசரியா அவர்கள். ஆனால் இக்காரியத்தில் வரலாற்றில் எவ்வாறு மிஷனரி ரேனியஸ் ஐயரவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டாரோ அதேபோன்று கனம்.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களும் புறக்கணிக்கப்பட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டார்கள்.
தன் கீழ் சாதாரண மிஷனரியாக வந்த ஒருவர் ஓரிரு ஆண்டுகளில் பேராயராக தனக்கு மேலதிகாரியாக உயர்த்தப்படுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஆனாலும் கனம்.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் பொறுமையோடு அதை ஏற்றுக் கொண்டார்கள். தனது 64 வயது வரை (1923) கர்த்தருடைய பணியை பேராயர். மகாகனம். அசரியாவின் கீழ் தோர்ணக்கல்லில் ஊழியம் செய்து ஓய்வு பெற்று பாளையங்கோட்டைக்கு வந்து 1923 – 1924 இல் இந்திய மிஷனரி சங்க காரியதரிசியாக பணி செய்துள்ளார்கள் 1924 இல் பணிநிறைவு பெற்றுள்ளார்கள்.
சி.எம்.எஸ்.மிஷனரி சங்கத்தின் அடிப்படைக் கொள்கையான சுத்தாங்க சுவிசேஷ கொள்கையில் கனம்.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்கள் பற்றுக் கொண்டவராக இருந்தமையால் எஸ்.பி.ஜி & சி.எம்.எஸ். மிஷன் சபை இணைப்பு ஐக்கிய தீர்மானத்திற்கு ஆதரவாக இல்லாமல் அமைதியாக தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.
ஐ.எம்.எஸ். தலைமைமிஷனரி ஆக தோர்ணக்கல்லில் ஊழியத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று தோர்ணக்கல் ஊழிய நிலவரத்திற்கு சிறந்த சான்றாக உள்ளதுஅந்த போட்டோவில் இந்திய மிஷனரி சங்க முதலாம் மிஷனரி ஆன கனம்.சாமுவேல் பாக்கியநாதன் அவர்களும் இந்திய மிஷனரி சங்க மூன்றாம் மிஷனரி ஆன கனம்.சாலமோன் பாக்கியநாதன் அவர்களும் நாற்காலிகளில் உட்கார்ந்த நிலையில் குடும்பத்தோடு இருப்பதும் 1909 இல் குரு பட்டம் பெறாத சாதாரண மிஷனரியாக வந்த பேராயர் அசரியா அவர்கள் நின்ற நிலையில் இருப்பதும் அந்த கால சூழ் நிலையை காட்டுகிறது.
குருப்பட்டம் பெற்ற ஆண்டு என எதையும் கணக்கில் எடுக்காமல் ஐரோப்பியர்களோடும், சென்னை பேராயர் அவர்களோடும் கொண்டிருந்த பழக்கத்தின் காரணமாக பேராயராக 1909 இல் சாதாரண மிஷனரி நிலையிலிருந்து வந்த அசரியா அவர்கள் குரு பட்டம் பெற்ற ஓரிரு ஆண்டில் 1912 இல் பேராயராக உயர்த்தப்பட்டதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராயராக இவருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டதற்கு பெரும் எதிர்ப்பு இருந்தது என்பதை மட்டுமே இந்திய மிஷனரி சங்க பொன்விழா சரித்திர நூல் கூறுகிறது.
சுத்தாங்க சுவிசேஷ சபை பிரிவினையில் அதன் ஆதரவாளராக இருந்தார் என்ற போதிலும் கனம்.சாமுவேல் பாக்கியநாதன் ஐயரவர்களின் பங்களிப்பு பிரிவினையில் பெருமளவில் இல்லை என்பதை சி.எம்.எஸ்.சுத்தாங்க சுவிசேஷ சபை வரலாற்று நூல் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. .
பேராயராக நியமிக்கப்பட்ட மகாகனம் அசரியா அவர்களால் கனம்.சாமுவேல் பாக்கியநாதன், கனம்.சாலமோன் பாக்கியநாதன் ஆகிய சகோதரர்கள் இருவரும் குறைவாக நடத்தப்பட்ட போது கனம்.சாலமோன் பாக்கியநாதன் ஐயரவர்கள் மட்டுமே அங்கிருந்து 1910 இல் விலகி நெல்லை திருமண்டலத்துக்கு வந்து சேர்ந்தார்கள் . இதுபோல வரலாறு நீண்டுகொண்டேசெல்கிறது. இறுதி கட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 50 திருச்சபைகளும்
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 திருச்சபைகளும் ஆக மொத்தம் 56 திருச்சபைகள் திருநெல்வேலி சிவிஷி சி.எம்.எஸ். சுத்தாங்க சுவிசேஷ திருச்சபையில் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் இரு சர்க்கிள்கள்
அவை *ஆழ்வாநேரி சர்க்கிளின் கீழ்
ஆழ்வாநேரி பாஸ்டரேட்,
மருதகுளம் பாஸ்டரேட்
)கோடன்குளம் பாஸ்டரேட்
என மூன்று பாஸ்டரேட்கள்
இடையன்குளம் சர்க்கிளின் கீழ்
இடையன்குளம் பாஸ்டரேட் , கண்டித்தான்குளம் பாஸ்டரேட், கீழஓமநல்லூர் பாஸ்டரேட்
என மூன்று பாஸ்டரேட்கள் உள்ளன.இதில் கண்டித்தான்குளமும் கீழ ஓமநல்லூரும் தாமிரபரணி ஆற்றங்கரையில் தருவை கிராமத்துக்குள் உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ் ஆறு சபைகள்
திருநெல்வேலி மாவட்டத்தில்
28 பள்ளிக்கூடங்கள் உள்ளன அவற்றில்
ஒரு மேல்நிலைப் பள்ளி,
5 நடுநிலைப் பள்ளிகள்,
22 தொடக்கப்பள்ளிகள்,
தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்று பள்ளிகள் உள்ளன அவற்றில்
ஒரு உயர்நிலைப் பள்ளி
இரு தொடக்கப்பள்ளிகள்
இனி தருவை கிராமத்தினை விட்டு தாமிரபரணி கரையில் மற்றொரு கிராமத்துக்கு செல்வோம்.
(நதி வற்றாமல் ஓடும்)


