பேட்துரைசாமிபுரத்தில் மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சி வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பாக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்துரைசாமிபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்து வருகிறது.
இந்த முகாமில் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலையம் சார்பாக மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி தலைமை வகித்தார். கவுன்சிலர் சாலமன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 50 மாணவிகள் கலந்து கொண்டு தீ தடுப்பு மற்றும் பேரிடர் மீட்பு குறித்த பயிற்சியில் ஈடுபட்டனர். ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் சீனிவாசன், பழனி ஆகியோர் மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்தி மீட்பு பயிற்சி அளித்தனர்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலட்சுமி இறுதியில் நன்றி கூறினார்.


